சினிமா உலகில் எப்பொழுதுமே உண்மை மற்றும் வரலாற்று நாவல் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படும் அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் உருவாக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் படம்.. நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக படக்குழு வெளியிட்டது.
முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஆரம்பத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது அதனால் இந்த படத்தின் வசூலும் அதிகரித்தது கடைசி வரை 500 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், பாரதிபன், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு என பல பிரபலங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். நிச்சயம் இரண்டாவது பாகமும் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, போஸ்டர், ட்ரைலர் போன்றவற்றை அடுத்தடுத்து வெளியீட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் இணையதள பக்கத்தில் உலாவுகிறது அதாவது இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் குந்தவை கதாபாத்திரம் தான் அதில் நடிகை திரிஷா சூப்பராக நடித்து வருகிறார் . முதல் பாகத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது திரிஷா கிடையாதாம்..
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தான் இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அண்மையில் கூட நயன்தாராவே நான் மணிரத்தினத்தின் படத்தை தவறவிட்டேன் என கூறினார் ஆனால் எந்த படம் எனக் கூறவில்லை ஆனால் ரசிகர்களின் பெரும்பாலான கருத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள குந்தவை கதாபாத்திரம் என கமெண்ட் அடித்து வந்தனர்.