நடிகர் தனுஷ் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால்தான் அவரது படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறுகின்றன. ஏன் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்கவும் ரெடியாக இருக்கிறார் தனுஷ் தற்பொழுது வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்பொழுது எப்படி நல்ல படங்களை கொடுக்கிறாரோ அதே போலவே தான் ஆரம்பத்திலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்தான்.
அந்த வகையில் தனுஷ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா போன்றவர்கள் நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திருவிளையாடல். இந்த படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது இந்த படத்திற்குப் பிறகு தனுஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் கிடைத்திருக்கிறது அதாவது திருவிளையாடல் படம் முதலில் தனுஷுக்கே வரவில்லையாம் வேறு ஒரு நடிகரை வைத்து தான் முதலில் எடுக்க இருந்தனராம் அது குறித்து ஒரு நடிகர் வெளிப்படையாக கூறியுள்ளார்..
நடிகர் பரத் கூறி உள்ளது திருவிளையாடல் படத்தின் கதை தனக்குத்தான் முதலில் வந்தது என கூறினார் அப்பொழுது அந்த கதை எனக்கு பிடிக்காமல் போனதால் அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை பிறகு நடிகர் தனுஷ் திருவிளையாடல் படத்தில் சூப்பராக நடித்தார். நல்ல ரெஸ்பான்சும் கிடைத்தது என கூறினார் பரத்..