பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஷங்கர் இவர் முதலில் ஜென்டில்மேன் என்னும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இவர் காதலன், இந்தியன், ஜீன்ஸ் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.
ஷங்கர் இதுவரை பல டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஹீரோவை வைத்து இன்றுவரை அவரால் படமே பண்ண முடியவில்லை அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல அஜித் தான் அஜித்தை வைத்து ஒரு தடவையாவது படம் பண்ணி விட வேண்டும் என்பது ஷங்கரின் ஆசை.
ஜீன்ஸ் படத்தில் இருந்து அடுத்த அடுத்த நான்கு திரைப்படங்கள் அஜித்திற்காக தான் ஷங்கர் எழுதினார் ஆனால் ஏதோ ஒரு வகையில் அந்த நான்கு படங்களும் தவறி போகின்றன அப்படித்தான் எந்திரன் படம். எந்திரன் திரைப்படத்தின் கதையை எழுதும் பொழுது அஜித்தின் ஸ்டைலை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறார்.
பிறகு கதை சொல்லும் பொழுது அஜித்க்கு இந்த கதை பிடித்திருந்தாலும் இது ஒரு பிரம்மாண்ட படம் தோல்வியை தழுவினால் தயாரிப்பாளர் தலையில் துண்டு தான் போட வேண்டும் என கருதி இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து இந்த கதையை கூறி இருக்கிறார்
அவர் நடித்து இந்த படம் வெளிவந்து மிகப் பெரிய ஒரு வெற்றி பெற்றது. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபலம் செய்யாறு பாலு வெளிப்படையாக கூறியிருந்தார். எந்திரன் படத்தை தொடர்ந்து 2.0 என்ற திரைப்படத்திலும் ரஜினி நடித்தார். இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.