அஜித் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காதல் கோட்டை இந்த படத்தை அகத்தியன் இயக்கியிருந்தார். காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து தேவயானி, தலைவாசல் விஜய், ஹிரா ராஜகோபால் போன்றோர் நடித்து அசத்தினர்.
இந்த படம் அப்பொழுது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது காதல் கோட்டை திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்துள்ளது இதனை ரசிகர்கள் சமூக வலை தளப் பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அகத்தியன் காதல் கோட்டை படம் குறித்த சில விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.
காதல் கோட்டை படத்தின் கிளைமாக்ஸ்கில் அஜித்தும் தேவயானியும் சந்திக்காத படி காட்ட இயக்குனர் முடிவு செய்தார் ஆனால் தயாரிப்பாளர் கிளைமாக்ஸ் நெகட்டிவ் ஆக அமையக்கூடாது பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதால் தேவயானியும் அஜித்தும் ஒன்று சேரும்படி படத்தை எடுத்து விடு என கூறி உள்ளார்
அவர் சொன்னது போலவே படத்தை எடுத்தார் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இவர்கள் இருவரும் சேராதபடி கிளைமாக்ஸ் எடுத்திருந்தாலும் அந்த படம் ஹிட் அடித்து இருக்குமா அடிக்காதா என்று எனக்கு தெரியவில்லை. மேலும் பேசிய அவர் இந்த காதல் கோட்டை படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது சின்னத்திரை சீரியல் நடிகர் அபிஷேக்.
அவர் கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு கணவர் கதாபாத்திரத்தில் நடித்த அபிஷேக் தான் இந்த படத்தில் நடித்தார். அது மட்டுமில்லாமல் காதல் கோட்டை படத்தில் கிட்டத்தட்ட பாதி படம் முடிந்த நிலையில் சில பிரச்சனைகளால் அபிஷேக் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் அதன் பிறகு நடிகர் அஜித்தை வைத்து மீண்டும் புதியதாக காதல் கோட்டை படத்தை எடுத்தாராம்.