தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் சமீப காலங்களாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பில் மண்டேலா திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.இத்திரைப்படம் ஓடிடி வழியாகவும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது உள்ள பல பிரபல நடிகர்,நடிகைகளின் ஃபேஸ்புக்கில் போலி கணக்கை ஆரம்பித்து. இதன் மூலம் அரசியல்வாதிகள் உட்பட இன்னும் பலருக்கு பொய்யான தகவல்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
இதன் மூலம் இவர்களுக்கு என்னதான் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து போலி கனுக்குக ளைஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர், நடிகைகளின் பெயரில் தொடர்ந்து போலி கணக்குகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதை முன்கூட்டியே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி விடுகிறார்கள் நடிகர்கள்.
இந்த பிரச்னைகள் வாரத்திற்கு இரண்டு முறையாவது இப்படி நடந்து விடுகிறது. அந்த வகையில் தற்பொழுது யோகி பாபு தனது பெயரில் போலி கணக்கு ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த கணக்கிலிருந்து கமலுக்கு டப் காம்படிஷன் சார் என்று மெசேஜ் செய்துள்ளார்களாம்.
இதனை அறிந்த யோகிபாபு பிரண்ட்ஸ் அது என்னோட கணக்கு இல்லை பொய்யான கணக்கு என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு தனக்கு என்று ஒரு கணக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.