நடிகர் அஜித்குமார் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க தனக்கென ஒரு நிரந்தர இடத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார் மறுபக்கம் இவரது செயல்பாடு அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து போனதால்..
தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதால் அவர் இளம் தலைமுறை ரசிகர்களும் அஜித் ரசிகராக மாறிவிடுகின்றனர். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விசுவாசம் நேர்கொண்டபார்வை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜீத்தின் 60வது படமான வலிமை படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது.
இந்தப் படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது ஒரு வழியாக இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை 224 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக இது அமைந்துள்ளது.
அஜித் சினிமா உலகில் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் அஜித்தை திரையரங்கில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேடை நிகழ்ச்சிகளில் தனது படங்களின் வெளியீட்டு விழா போன்ற எதிலும் அவரை பார்க்க முடியாது எங்கேயாவது பொது இடத்தில் பார்த்தால் மட்டுமே உண்டு அதுவும் மிக அரிதான ஒன்றாக இருக்கிறது.
ரசிகர்களும் சரி நடிகர்களும் சரி அஜித்தை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாமல் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர் அருணசலம் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் இங்கே தான் நான் போவேன் என கூறியுள்ளார். அஜித்தின் மகளும், நடிகர் ஷாம் மகளும் கிட்ஸ் ஏஞ்சல் என்ற பள்ளியில் படித்து வருகின்றனர் அங்கே அடிக்கடி கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு மட்டும் அஜித் தவறாமல் வந்து விடுவார் நானும் அஜித்தை பார்க்க தொடர்ந்து அங்கு போவேன் என கூறினார்.