வீட்டில் இருக்கும்போது கையில் ஸ்மார்ட்போன் வெளிய வந்தா வாக்கிங் ஸ்டிக்கா..! எதற்காக நடிக்கிறார் யாஷிகா..?

yashika-anand-1
yashika-anand-1

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என போற்றப்பட்டவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் சில மாதங்களுக்கு முன்பாக தான் சென்னையில் உள்ள மாமல்லபுரம் என்ற இடத்தில் கார் விபத்து ஏற்பட்டு பல்வேறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்து வந்தார்.

அப்போது இந்த விபத்தின் போது அவருடன் இருந்த அவருடைய தோழி விபத்து நடந்த இடத்திலேயே பலியானார்.  இதன் காரணமாக நடிகை யாஷிகா மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது நடிகை யாஷிகா விற்கும் பல்வேறு எலும்புகள் முறிவடைந்த நிலையில் பல சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பெற்ற நமது நடிகை யாஷிகா பல நாட்களாக மருத்துவமனையிலேயே தங்க வைத்து சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் உடல்நிலை கொஞ்சம் சரியான பிறகு வீடு திரும்பிய யாஷிகா தன்னுடைய உடல்நிலை குறித்து அவ்வப்போது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.

அந்த வகையில் விபத்திற்கு பின்பாக தான் எழுந்து நின்று நடந்த வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா நேற்று சென்னையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று உள்ளார்.

அப்பொழுது கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் அவர் நடந்து வந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  புது வீட்டில் கிரகப்பிரவேசம் அப்போது அவர் கையில் எந்த ஒரு ஸ்டிக்கும் இல்லாமல் தான் நன்றாக நடந்தார் ஆனால் திடீரென இப்படி நடிப்பதற்கு காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.