விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யின் முதலில் இருந்து வந்த இந்த சீரியல் தற்போது கடைசிக்கு தள்ளப்பட்டுள்ளது எனவே இந்த சீரியலை மீண்டும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலின் இயகுனர் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சுமார் 9 வருடங்களுக்கு பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து பள்ளியில் அழைத்துச் சென்ற சுற்றுலாவிற்கு தனது மகள்களுடன் சென்றிருந்தார்கள். முகம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பிரேம் போட்ட வீட்டில் மாற்ற வேண்டுமென ஆசைப்படுகிறாள்.
அதனை பிரேம் செய்து மாட்ட போகும் நேரத்தில் பாரதி பார்த்துவிட்டு உச்சகட்ட கோபத்தில் போட்டோவை கையில் வைத்திருந்த அகிலனை திட்டுகிறான். சௌந்தர்யா பலவற்றைச் சொல்லி சமாளித்தாலும் அதனையெல்லாம் கேட்காமல் பாரதி போட்டோவை தூக்கி எறிய முயற்சிக்கின்றான்.
இவ்வாறு சௌந்தர்யா, அகிலன் என அனைவரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து தனது பிள்ளைகளுடன் வாழ வேண்டுமென நினைத்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாரதி கண்ணம்மாவின் மீதியிருக்கும் சந்தேகத்தினாலும் கோபத்தினாலும் அவளின் மீது இருக்கும் கோபத்தினை தனது குடும்பத்தின் மீது காட்டுகிறான்.
இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று சௌந்தர்யாவின் கல்லூரி படித்த நண்பர் ஒருவர் சுவாரஸ்யமான தகவல்களை கூறி தனது குடும்பத்தை பற்றியும் பகிர்ந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் புதிதாக அறிமுகமானதால் ஏற்கனவே வெண்பாவிற்கு ஒரு ஜோசியர் உன்னை விரும்பும் நபர் உன்னை தேடி வருவார் என கூறியிருந்த நிலையில் அந்த நபர் சௌந்தர்யாவின் நண்பராக இருக்குமோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.