சிம்புவிற்கு விரைவில் திருமணமா.? விடிவி கணேஷ் என்ன சொல்கிறார்.!

simbu and vtv ganesh
simbu and vtv ganesh

சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தற்பொழுது ரஜினி எப்படி தக்க வைத்து வருகிறாரோ அதுபோல தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வைத்துள்ளவர் தான் சிம்பு. இவர் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு நான் நடிகனின் மகன் என்பதை வெளிப்படுத்தி காட்டினார் அந்த அளவிற்கு இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தினை தொடர்ந்து கோயில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா ,சரவணா, வல்லவன், காளை என்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வெகுவிரைவில் வளரத் தொடங்கினார். மேலும் அவர் நடிகனாக மட்டும் தமிழ் சினிமாவில் செயல்பட விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனராகவும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில் இவர் மன்மதன் வல்லவன் போன்ற சிறப்பு கூடிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தான் பன்முகத்தன்மை கொண்டவராக மாற்றிக் கொண்டார் சிம்பு அதுமட்டுமில்லாமல் மேலும் தன்னை சினிமாவில் நிரூபிக்கும் விதமாக பாடலாசிரியராகவும், பாடகராகவும் தன்னை மாற்றிக் கொண்டே வந்தார் அத்தகைய செயல்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.

சமீப காலமாக இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய தோல்வியடைந்ததால் வெற்றி கொடுக்க முடியாமல் தற்போது போராடி வருகிறார்.இந்த நிலையில் சிம்பு அவர்கள் இனி முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என தனது பிறந்த நாள் விழாவில் சமீபத்தில் கூறினார் அதன் படி சிம்பு தற்போது தமிழில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இப்படதிற்கு அடுத்தபடியாக சிம்பு மஃப்டி என்ற கன்னட திரைப்படத்தில்  நடிக்க உள்ளார் சிம்பு இப்படம் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிம்பு திருமண செய்தி ஒன்று வலைதளத்தில் உலா வருகிறது அதற்குக் காரணம் விடிவி கணேஷ் சமீபத்தில் அவர் பிரபல வலைதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது சிம்பு விரைவில் திருமணம் செய்ய உள்ளார் சீக்கிரமே அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார் இச்செய்தி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய காட்டுத்தீ போல பரவி வருகிறது மேலும் சில தகவல்கள் கசிந்து உள்ளது நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுக்க உள்ளாராம் அவரது தாய் உஷா. இருப்பினும் அச்செய்தியை அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.