தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் சிம்பு நடித்த வரும் நிலையில் கடைசியாக வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தயாரிப்பாளர் நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
அந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்தாலி நடித்து இருந்தார். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புகுட்டி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்போது வரையிலும் 10.86 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்று இருக்கும் பாடல் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று உள்ளது அந்த வகையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் பாடலாக இது திகழ்ந்துவரும் நிலையில் யூடியூப்-பில் பல லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பாடலை மதுஸ்ரீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு ரூபாய் 92 மதிப்புள்ள Toyota Vellfire காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து இந்த படத்தினை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்ட் பைக் சாக வழங்கியுள்ளார். இதனைக் கூறி கௌதம் மேனன் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.