உடலை குறைக்க போறேன் என பல்லி போல் மாறிய விஜே ரம்யா.! வைரலாகும் புகைப்படம்

vj-ramya-1
vj-ramya-1

விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருந்து வருகிறது.என்னதான் அவர்கள் மற்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும் விஜய் டிவி அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து பலரை தற்போது சினிமாவில் உச்சத்தில் நிறுத்தி வருகிறது.

அந்தவகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் ஆனால் விஜய் டிவிதான் இவருக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறு பிரபலமான இவர் தற்பொழுது தொகுப்பாளினி பணியை விட்டுவிட்டு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு மிகவும் பிசியாக திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவருடன் திருமணமானது. பொதுவாக சினிமா துறையில் பணியாற்றி வரும் ஏராளமானோர் சில வருடங்கள் மட்டுமே தன் கணவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் பலர் பிரிந்து விடுகிறார்கள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அதனை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் பலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் சிங்கிளாக வாழ்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ரம்யா தற்பொழுது சிங்கிளாக தனது லைஃபை என்ஜாய் பண்ணி வருகிறார்.

ramya 1
ramya 1

சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்தவகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

vj
vj