ஏராளமான நடிகர் நடிகைகள் சின்னத் திரையின் மூலம் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் பிரபலமடைந்தவர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் தொகுப்பாளர் ரக்ஷன். இவர் விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகர்கள் அதிகமாகவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு KPY சாம்பியன்ஸ், KPY 6,7 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பிறகு ஜோடி fun அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கு பெற்றார்.
இவ்வாறு சின்னத்திரையில் கலக்கி வந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், ஹீரோவின் நண்பனாக ரக்ஷனும் நடித்திருந்தார்கள்.
இதன் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது விழாவில் கூட சிறந்த தொகுப்பாளர் என்ற விருதை பெற்றார்.
இந்நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் ஒரு நாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ரக்ஷன் திரைப்படங்களிலும் நடித்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.