பிரபல விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் நீண்ட வருடங்களாக பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் தொகுப்பாளர் ரக்சன். இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து சீசன் 6 மற்றும் 7 போன்றவற்றிலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது இவர் தமிழகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார்.
இது தான் ரக்ஷானின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமாவில் துணை நடிகராக பிரபலமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரக்ஷன் ரேஸ் பைக் ஒன்றில் கெத்தாக அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.