தொகுப்பாளர் தொழிலை விட முடிவு எடுத்த VJ பிரியங்கா – இதுதான் காரணமாம்..

vj priyanka
vj priyanka

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர். இதனையடுத்து ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியையும் சோலோவாக பிரியங்கா தொகுத்து வழங்கி தொகுப்பாளர்களில் முக்கிய ஒருவராக பார்க்கப்பட்டார்.

பின்பு ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார். சில இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியிலே வந்து ஆங்கரிங் தொழிலை தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா கடந்த மாதம் அவரது பிறந்தநாளை விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலருடன் கொண்டாடினார். அப்போது சிலர் பிரியங்காவிற்கு கிப்ட் வழங்கினர் மேலும் கேக் வெட்டியும் முகத்தில் எல்லாம் பூசி செம்ம சந்தோஷமாக கொண்டாடி இருந்த நிலையில் அந்த வீடியோவை தற்போது பிரியங்கா ஒரு மாதம் கழித்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் காமெடியன் பாலாவுடன் பேசும் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது அதில் பிரியங்கா தனக்கு 30 வயது ஆகிவிட்டது அதனால் வயதானது போல் ஃபீல் ஆகிறது நான் இதோடு தொலைக்காட்சியை விட்டு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பாலா மைக்கை பிடித்தவர்களெல்லாம் ஆங்கரின் ஆகிவிட முடியாது மைக்குக்கே பிடித்தவர் தான் நீ, நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது என பிரியங்கா விடம்  பேசி அவரது என்னத்தை ஏமாற்றியுள்ளார்.