சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மணிமேகலை. பின்பு ஒரு கட்டத்தில் சன் டிவியில் இருந்து விஜய் டிவி பக்கம் தாவியுள்ளார். அந்த வகையில் முதலில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் தனது கணவர் உசைன் உடன் இணைந்து கலந்து கொண்டார். இதில் அவர்களது காதல் ரொமான்ஸ் எல்லாம் ஒரு பக்கம் வெளிப்பட்டிருந்தாலும்..
மணிமேகலையின் காமெடி டைமிங் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த நிகழ்ச்சி மூலம் மணிமேகலைக்கு ரசிகர்களும் உருவாகினார். இதைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலைக்கு ஒரு கட்டத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சமையல் என்றால் என்னவென்றே தெரியாத மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் நடிக்கும் லூட்டி கொஞ்சநஞ்சம் அல்ல ஆனால் அது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் இருந்தது. அதனால் மணிமேகலை தொடர்ந்து குக் வித் கோமாளி மூன்று சீசன்களிலும் கோமாளியாக பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து youtube யிலும் தனது கணவர் உசைன் உடன் இணைந்து ஒரு சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் பல வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு மற்றும் கிராமங்களுக்கு சென்று அங்கும் ஷூட்டிங் நடத்தி எண்ணற்ற பாலோவர்ஸ்களை தக்க வைத்துக் கொண்டனர். இப்படி இருக்கின்ற நிலையில் உசைன் மற்றும் மணிமேகலை இருவரும் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது இவர்கள் வீடு மாறி உள்ளனர். அதனை அவர்களது youtube சேனல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர் ஆம் மணிமேகலை மற்றும் உசைன் இருவரும் அவர்களது வீட்டை முழுவதும் சுற்றி காண்பித்து வீடியோவாக எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வீடு சூப்பராக இருக்கு என கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.