ஒரு எபிசோடுக்கு மாகாபா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? வைரலாகும் தகவல்.

ma ka pa
ma ka pa

‌விஜய் தொலைக்காட்சியின் மூலம் உலகிற்கு அறிமுகமான நபர்கள் மிக அதிகம், எவராலும் அறியப்படாத எங்கேயோ கடைக்கோடியில் திறமையுடன் வாழும் சாதாரண மனிதர்களை அனைவரும் அறியும்படி அசாதாரணமாக மாற்றுவதுதான் விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர்களான பிரியங்கா, மாகாபா ஆனந்த், ஈரோடு மகேஷ்,கோபி என அனைவரும் மிக பிரபலமானவர்கள். மாகாபாவும் பிரியங்காவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அந்த நிகழ்ச்சி மிக அருமையாக செல்லும், இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிதான் “சூப்பர் சிங்கர்” இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பி பார்க்க பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

மேலும் மாகாபாவால் பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, அவை அனைத்தும் இதோ உங்களுக்காக ( மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால்,அது இது எது ) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி மாகாபாவிற்கு “பிரைட் ஆப் தி சேனல்” என்ற விருது வழங்கி சிறப்பித்தது.

ரேடியோவில் ஆர்ஜேவாக தனது வாழ்க்கையை தொடங்கிய மாகாபா அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது சம்பளம் எவ்வளவு என்ற செய்தி வெளியாகியுள்ளது.இவர் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினால் இவருக்கு சம்பளம் ஒரு லட்சம் என்று செய்தி வெளியாகியுள்ளது.