இளம் நடிகைகளுக்கு இணையாக உடல் எடையை குறைத்து ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ஜாக்குலின்.! வைரலாகும் புகைப்படம்

jagulin

தற்பொழுது தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி பெரும்பாலும் மற்ற தொலைக்காட்சியை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளர்கள் தான். எனவே ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான தொகுப்பாளர்கள் விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்கள் அதில் ஒருவர் தான் ஜாக்குலின் இவருடைய குரலுக்காகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதாவது இவருடைய குரல் கீச்சு கீச்சு என இருப்பதால் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதனை கிண்டல் செய்து ரசித்து வருகிறார்கள். மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கமெண்ட் இருந்து வருகிறது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பி ஏ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஆனால் இந்த சீரியல் இருக்கு பிறகு படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என எந்த ஒரு பணியிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் இவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் தேடி வந்தார்கள்.

jagulin
jagulin

இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக கடின உழைப்பால் தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார் உடலினை குறைப்பதனால் தான் சிறிது பிரேக் எடுத்து கொண்டிருக்கிறார் எனவே தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்த ஸ்லிம்மாக மாறிய ஜாக்குலின் விஜய் டிவியின் புதிய சோவில் கலந்து கொண்டிருக்கிறார் அந்த ஷோ தீபாவளி ஸ்பெஷலாக விஜய் டிவியில் வெளியாக இருக்கிறது மேலும் ஜாக்குலின் தீனாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.