இந்த டிரஸ் உனக்கு நல்லாவே இல்ல.. வேற டிரஸ் இல்லையா.? டிடியை கடுப்பாக்கிய நடிகை

divyadharshini
divyadharshini

Vj Divyadharshini: தொகுப்பாளர்  திவ்யதர்ஷினி பேட்டிக்காக வந்த நடிகை தனது உடை குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்து வரும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அப்படி இவர் ஏராளமான பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கும் நிலையில் இதன் மூலம் இவருக்கு பல திரைப்படங்கள் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த  ரொம்பவே ஃபேமஸான ஒரு நிகழ்ச்சி தான் காபி வித் டிடி. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்களை நேர்காணலில் பேட்டி எடுத்தார் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவ்வாறு காபி வித் டிடி நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதால் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டதாக பேட்டி அளித்திருந்தார் ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

திவ்யதர்ஷினி சமீப காலங்களாக அரியவகை தசை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனால் அவரால் ரொம்ப நேரம் நிற்க முடியாது எனவே இதன் காரணமாக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திற்க்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டிடி சின்னத்திரையில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் அப்படி கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படி கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது கௌதம மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் திவ்யதர்ஷினி சமீப பேட்டியில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய இவர், எந்த சிறப்பு விருந்தினரும் என்னை கோபப்படுத்தியது இல்லை இருமுறை என்னுடைய நிகழ்ச்சிக்கு ஒரு கதாநாயகி வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக தான் வந்தார் அப்பொழுது அவரது உடையும் என்னுடைய உடையும் ஒரே மாதிரி தான் இருந்தது.

உடனே அந்த நடிகை என்னிடம் வந்து டிடி உங்களிடம் வேறு எதுவும் உடை இருக்கிறதா. எடுத்து வந்திருக்கிறீர்களா என கேட்டார் அதைக் கேட்டதும் எனக்கு பயங்கரம் கஷ்டமாகிவிட்டது. அவர் கேட்டது எப்படி இருந்தது என்றால் தொகுப்பாளராக இருந்து கொண்டு உனக்கு எதுக்கு இந்த டிரஸ் என்ற கண்ணோட்டத்தில் கேட்பது போல் தான் இருந்தது இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் மரியாதை தான் பேட்டி எடுத்தேன் என கூறியுள்ளார்.