சிவப்பு நிற உடையில் பைங்கிளி போல் இருக்கும் டிடி.! வைரலாகும் புகைப்படம்

DIVYA-DHARSHNI

தொகுப்பாளராக இருந்தாலும் தனது அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என்ற டிடி.  இவர் கிட்டத்தட்ட விஜய் டிவியில் 20 வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.  இவரை ஏராளமான ரசிகர்களுக்கு பிடித்ததால் டிடி என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள் அதோடு விஜய் டிவியின் செல்லப் பிள்ளையும் இவர்தான்.

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதனை மிகவும் ஸ்டைலாகவும், சுவாரசியமாகவும் கொண்டு செல்வதில் வல்லமை உடையவர். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தொகுப்பாளர் பணிதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.இவர் சினிமாவிற்கு அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.  தற்பொழுது இவர் கதை சொல்லல் எனும் story telling புதிதாக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீப காலங்களாக மாலத்தீவு மற்றும் அந்தமான் தீவுகள் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் பதிவேற்றி வருகிறார்.

dd
dd

இந்நிலையில் தற்பொழுது துர்க்கை அம்மனை வழிபடுவதற்காக புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை கொண்டாடப்பட்ட நிலையில் துர்கா பூஜையில் கலந்து கொண்ட டிடி சிவப்பு நிற உடையில் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

dd 1
dd 2