Bayilvan Ranganathana: பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி குறித்து பேசி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90 கால கட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமான பயில்வான் ரங்கநாதன் சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
மேலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வரும் நிலையில் தான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். அப்படி நயன்தாரா, திரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் கிடைக்கும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருவதனால் பலரும் இவர் அவதூறாக பேசி வருவதாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ரேகா நாயர் உள்ளிட்ட சில பிரபலங்கள் பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்து சண்டை போட்டும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மேலும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். சின்னத்திரை குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி குறித்தும் பேசியிருக்கிறார்.
அதாவது, திவ்யதர்ஷினியும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே இல்லை உடல் தேவைக்காக திருமணத்தை அவசரமாக முடித்தார்கள். அது ஒரு நோய். இரண்டு பேரும் தங்களது உடலை மட்டுமே விரும்பினார்கள் அதற்கான தேவை முடிந்த பிறகு விவாகரத்து செய்து கொண்டனர் என்று கூறியுள்ளார்.
திவ்யதர்ஷினி தனது சிறுவயதில் இருந்து சினிமாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி சில திரைப்படங்களிலும் சமீப காலங்களாக நடித்து வரும் நிலையில் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான இவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது அரியவகை தோல் நோயினால் பாதிக்கப்பட்ட இருப்பதனால் சின்னத்திரையில் பணியாற்றாமல் இருந்து வருகிறார்.