Vj Dhivyadharshini: தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி விஜய் டிவியிலிருந்து வெளியேறிய நிலையில் இது குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. அப்படி விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்ததால் விஜய் டிவியின் செல்லப் பிள்ளை டிடி என அழைக்கப்பட்டார்.
ஆரம்ப காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்கள் படங்களின் இசை வெளியீட்டு விழா, அவார்டு நிகழ்ச்சி போன்றவற்றையும் தொகுத்து வழங்கினார்.
இதனை அடுத்து தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படி கடைசியாக ஜெய், ஜீவா ஆகியோர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காபி வித் காதல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் டிடி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எதற்காக டிடி விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் சமீப பேட்டியில் பேசிய இவர், மணிக்கணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததன் காரணத்தினால் தான் தனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.
பொதுவாக விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். அது எல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அப்பொழுது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும் அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த மாதிரி நிலைமைதான் ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கிவிட்டது. எனவே நான் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.