மீடியோ உலகைப் பொறுத்தவரை அதீத திறமை இருந்தால் மட்டுமே ஏதாவது ஒரு வழியில் முன்னேற முடியும் அந்த வகையில் விஜே சித்ரா தொகுப்பாளராக அறிமுகமாகி பின் நடன கலைஞராக மாறினார்.
அதிலும் வெற்றி கண்டதால் சீரியல் நடிகை கடைசியாகவும், வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார் இப்படி படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்ட சித்ராவிற்கு அதற்கேற்றார்போல ரசிகர் கூட்டமும் அதிகமாயின.
அதுவும் சின்னத்திரை சீரியல்களில் இவரது நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது சின்ன பாப்பா பெரிய பாப்பா, வேலுநாச்சியார் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார் அதையெல்லாம் தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரது முல்லை கதாபாத்திரம் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்ததோடு அவர்களுக்குரசிகர்களும் அதிகம் வந்தனர்.
இப்படி சின்னத்திரையில் வெற்றி கண்டு வந்த விஜே சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதிலேயும் தனக்கான ரசிகர்களை மென்மேலும் விரிவுபடுத்திக் கொண்டே சென்றார். இப்படி இருந்த நிலையில் திடீரென நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இருபின்னும் அவ்வபொழுது பிஜே சித்ராவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது அந்த வகையில் சின்னத்திரையில் தற்போது நடித்து வரும் ரச்சிதாவுடன் சித்ரா இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.