மீடியா உலகில் தொட்ட எல்லாவற்றிலும் வெற்றி கண்டு படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் விஜே சித்ரா. முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் நடன கலைஞராகவும் அதன்பின் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கியவர் விஜே சித்ரா.
யாரும் எதிர்பார்க்காத வகையில் (பாண்டியன் ஸ்டோர்) சீரியலில் அசாதாரமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்களை உருவாக்கினர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று அந்த ரசிகர் கூட்டதை தக்க வைத்துக் கொள்ள விஜே சித்ரா பல விதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.
இப்படி போய்கொண்டு இருந்த கால கட்டத்தில் தான் திடீரென வெள்ளித்திரையில் “கால்ஸ்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜே சித்ராவுக்கு இனி நல்ல காலம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜே சித்ரா திடீரென நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன்னை மாய்த்து கொண்டார்.
இது அவரது ரசிகர்களுக்கு மரண செய்தியாக இருந்தாலும், அவரது நினைவு மட்டும் இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்கவில்லை. ரசிகர்களுக்கு எப்பொழுதெல்லாம் விஜே சித்ராவின் ஞாபகம் வருகிறதோ அப்பொழுது எல்லாம் அவரது அன்ஸின் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அப்படி பல புகைப்படங்கள் வந்த நிலையில் தற்போது பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளிவருகின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனுடன் விஜே சித்ரா. பல வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.