விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்த vj சித்ரா இன்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தகவல் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களின் பெயரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தற்கொலை செய்து கொண்டபோது இவரின் வருங்கால கணவர் இவருடன் தான் இருந்துள்ளார். குளிக்க போவதாக கூறிவிட்டு வருங்கால கணவரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கதவை பூட்டி கொண்டாராம் சித்ரா.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பின்பு ஓட்டல் ஊழியர் களுடன் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தால் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் கண்ணீருடன் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரின் வருங்கால கணவர் சித்ரா மன கஷ்டத்தில் தான் இவ்வாறு செய்து கொண்டார் எனவும் கூறுகிறார்.
ஆனால் vj சித்திரா மிகவும் தைரியமான பெண் என அவருடன் இருந்த பல பிரபலங்கள் கூறுகிறார்கள். இதனால் vj சித்ராவின் மறைவில் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜே சித்ரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.