விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.
இவர் இந்த நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கால்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதியன்று பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் இந்த செயல் திரையுலகினர், ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இவருடைய கணவரான ஹேமநாத் செய்த மோசமான விஷயத்தால் இவர் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சித்ரா இறந்து மூன்று மாத காலங்கள் ஆகியும் ரசிகர்கள் அவரைப் பற்றிய வீடியோக்கள்,புகைப்படங்கள் என்று சோசியல் மீடியாவில் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சித்ராவின் நினைவாக மண்டபம் ஒன்று வைத்துள்ளார்கள். அந்த மண்டபத்தின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.