தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.பிறகு விஜய் டிவியில் டான்ஸ் ஷோ ஒன்றில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்தார்.
இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
பிறவி வெள்ளித்திரையிலும் கால்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் வெற்றிகரமாக நடித்து முடித்தார். பின்பு எதிர்பாராதவிதமாக நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் இந்த செயல் திரையுலகினர்களையும்,ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் பொதுவாக சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை கொண்டவர். இந்நிலையில் இவர் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இதன் மூலம் ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவதையும் தொடர்ந்து செய்து வந்தார் இதனால் இவருக்கென்று தனி ஆர்மி உருவானது. இந்நிலையில் சித்ரா மறைவதற்கு முன்பு ஒரே போட்டோவில் 3 சித்ரா இருப்பது போல் வித்தியாசமாக எடுத்த போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.