விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகர் புகழ். இவர் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவரில் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் இந்த இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவர் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதன் மூலம் வெள்ளித்திரையிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் புகழின் உச்சத்தை தொடும் நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் இந்த செயல் ஒட்டுமொத்த திரையுலகினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பொதுவாக சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் குணம் உடையவர். இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.
அந்த வகையில் சித்ரா மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.