ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நடிகையும் மற்றும் நடிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள் அதிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தங்களுடைய திறமையால் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டு விடுவார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் டிடி, ரம்யா என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம்.
அப்படிதான் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் பாவனா பாலகிருஷ்ணன் இவர் பல திறமைகளை உடையவர் ஒரு ஆர் ஜே வாக தனது கேரியரை தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபல தொகுப்பாளராக வலம் வந்தார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த vj பாவனா இந்திய அளவில் பிரபலமானது sports நிகழ்ச்சி தொகுப்பாளராக கிரிக்கெட் வர்ணனையாளராக அசுர வளர்ச்சி அடைந்தார். கலர்ஸ் தொலைகாட்சியில் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கியது பாவனா விஜய் டிவிக்கு மீண்டும் வருவாரா என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதிலை கொடுத்துள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் டான்ஸ் வி எஸ் டான் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பாவனா இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியான நாளிலிருந்து பாவனா மீண்டும் தமிழ் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறுவாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்து வந்தது.
தன்னுடைய சமூக வலைத்தள கணக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறியிருந்தார் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் இணையப் போகிறார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள் ஆனால் ஒருசில எபிசோடுகளில் மட்டுமே அவர் கலந்து கொள்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் பணியாற்றுவார் என்ற கேள்விக்கு விஜய் டிவியில் இனிமே நான் செல்ல மாட்டேன் என ஒரேடியாக கூறிவிட்டார் அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கும் எனக்கும் ஒத்து வராது என்றும் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் நகைச்சுவை கண்ணோட்டத்தில் எடுத்து செல்கிறார்கள் நகைச்சுவையாக தொகுத்து வழங்குவதால் அதிக கவனம் கிடைக்கிறது ஆனால் என்னால் அந்த அளவு நகைச்சுவையாக தொகுத்து வழங்க முடியாது இப்பொழுது அது என்னுடைய செயல் இல்லை இனி அவர்களுடன் நான் எப்பொழுதும் பணியாற்ற மாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.