பொதுவாக சின்னத்திரையில் நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உண்டு அந்த வகையில் மாகாபா ஆனந்த், பிரியங்கா,அர்ச்சனா என அனைத்து தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் முக்கியமாக ரசிகர்கள் விரும்பும் வகையில் மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி-யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எடுத்துக்காட்டாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, பிபி ஜோடிகள் 2, கலக்கப்போவது யாரு என அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ஒருவர் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றய் தொகுத்து வழங்குவதற்காக மாறுகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒயிட் கார்டு என்ட்ரியாக ஆறாவது சீசனில் அறிமுகமானவர்தான் தொகுப்பாளர் அர்ச்சனா.
விஜய் டிவியில் அறிமுகமாவதற்கு முன்பு பல ஆண்டுகளாக ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அர்ச்சனா மற்றும் இவருடைய மகள் சாரா இருவரும் இணைந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூப்பர் மாம் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது எனவே தனது மகளுடன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.