நடிகைகளைப் போல் அட்டைப் படத்திற்கு முதன் முறையாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா.! ஆளை மயக்கும் புகைப்படம்.!

archana-1
archana-1

தொகுப்பாளினி என்றாலே அதற்கு பேச்சு திறமை தான் முதல் முக்கியம் அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகும் முதலில் இருந்து முடியும் வரையிலும் கொஞ்சம் கூட எனர்ஜி கூட குறையாமல்  மிகவும் காமெடியாகவும், மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் திறமை வாய்ந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் நீண்ட காலங்களாக ஜீ தமிழில் பணியாற்றிவந்தார்.இதற்கு முன்பே சன் டிவி, விஜய் டிவி இரண்டிலும் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்ததிலிருந்து  மற்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றுவதை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் போடியளாரக விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா மீண்டும் விஜய் டிவி தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கியுள்ளார். அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பான காதலா காதலா நிகழ்ச்சியையும்  தற்பொழுது ஓல்ட் இஸ் கோல்ட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருகிறார்.

இந்நிலையில் இவர் சோஷல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பழைய நினைவுகளை நினைவு படுத்தும் வகையில்  பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அர்ச்சனா முதல் முதலாக சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஒரு அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

archana 2
archana 2