தற்பொழுது உள்ள வெள்ளித்திரை நடிகைகளைவிடவும் சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளினி தான ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் நடிகை vj அஞ்சனா.
இவர் தொடர்ந்து சன் டிவியில் தான் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பல பிரபலங்களின் நேர்காணல், சன் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுக் கொள்வது, தொகுத்து வழங்குவது என பலவற்றைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கயல் திரைபடத்தில் ஹீரோவாக நடித்திருந்த சந்திரனை 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது தான் குழந்தை பிறந்துள்ளது. எனவே சில காலங்களாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் இருந்து சற்று பிரேக் எடுத்துக்கொண்டார் அஞ்சனா.
தற்பொழுது தான் மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் புதுயுகம், ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட இன்னும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் இவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் திறமை வாய்ந்தவர்கள்காண மிஸ் சின்னத்திரை விருது அஞ்சனாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அஞ்சனா தற்பொழுது தனது தோழியுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.