தற்போது சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகளும் மிக பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்கள் இதற்கு முக்கிய காரணமே சமூக வலைதளம் தான்.
இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய சிறந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இதன் மூலமாக பட வாய்ப்புகளையும் தட்டி தூக்கி விடுகிறார்கள். அப்படிதான் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் vj அஞ்சனா.
என்னதான் இவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது அவருக்கு வயது ஆனாலும் சரி ரசிகர் கூட்டத்துக்குள் பஞ்சமே இல்லாமல் தினசரி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் vj அஞ்சனா இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளையும் கமண்ட்களையும் கொட்டி வைத்துவிட்டார்கள். அஞ்சனா சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.
இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களிடம் அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் பேசுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அஞ்சனா பேசிய பொழுது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ சொல்லி விட்டு உங்களை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் அதன் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு அஞ்சனாவின் கணவர் அட்ரஸ் கொடுங்கள் அனுப்பி வைக்கிறேன் என கிண்டல் அடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தியானது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.