பிரபல இயக்குனருடன் கை கோர்க்க இருந்த விவேக்.! வருத்தப்பட்டு தற்போது ட்விட் செய்த இயக்குனர்.!

viverk
viverk

சின்ன கலைவாணர் என்று தமிழ் திரை உலகில் அனைவராலும் அன்போடு அழைக்கப் பட்டு வந்தவர் தான் நடிகர் விவேக் இவர் மற்ற காமெடி நடிகர்களைப் போல இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக தான் நடிக்கும் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு புரியும் விதமாக நல்ல நல்ல கருத்துக்களை கூறி இருப்பார் அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த பல திரைப்படங்கள் தற்பொழுதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் கடந்த வருடம் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தமிழ் திரையுலகில் இருந்து மறைந்து விட்டார் இவர் மறைந்தாலும் இவரது நினைவாக இவரது ரசிகர்கள் தற்போது இவரது லட்சியமான மரக்கன்றுகளை நாள்தோறும் நட்டு வைத்து வருகிறார்கள் இவரது இழப்பு குறித்து இவருடன் பணியாற்றி வந்த பல பிரபலங்களும் இவருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள்.

இவர் மறைந்தாலும் இவர் இறுதியாக நடித்த பல திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் தற்பொழுது வெளியாகி வருகிறது அந்த வகையில் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிதான் Lol: Enga Siri Paapom இவர் மறைந்தாலும் இவர் நடித்த இந்த நிகழ்ச்சியை இவரது ரசிகர்கள் பலரும் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

அதேபோல் இவர் மறைவதற்கு முன்பு அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் கேட்டு வரும் நிலையில் தற்போது இவரை பற்றி புதிதாக ஒரு பிரபலம் ட்விட் செய்துள்ளார்.

ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் விவேக் நடித்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு அண்மையில் இயக்குனர் கௌதம் மேனன் விவேக் அவர்களுடன் இணைந்து நான் படம் செய்ய இருந்தேன் ஆனால் அதற்கு அவர் நான் நடித்து OTTயில் வெளியாக இருக்கும் ஷோ வரட்டும் பின் பேசலாம் என கூறியதாக இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.