சிரிப்பில் சிந்திக்க வைத்த மாமனிதர் விவேக். பொதுவாக இவர் நடிக்கும் அனைத்து படங்களிலுமே காமெடியில் பல சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை கூறி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
பொதுவாக சினிமா என்றாலே நடிகர்கள் அல்லது நடிகைகளின் மீது பல விமர்சனங்கள் எழுவது வழக்கம் ஆனால் இதுவரையிலும் எந்த விமர்சனமும் இல்லாமல் மிகவும் ஒரு நல்ல மனிதனாக இருந்தவர் விவேக் மட்டும் தான்.
எண்ணம் போல் வாழ்க்கை என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக விவேக்கை கூறலாம். ஏனென்றால் இவருடன் அறிமுகமான பல நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் தற்போது திரையுலகில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
ஆனால் விவேக் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரைலும் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்கள் என்று அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இறந்துவிட்டார் என்பதையே இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அந்த வகையில் பல திரையுலகினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் விவேக்கின் பிரிவு தாங்காமல் வெளியிடும் ட்விட்டுகள் இணையதளத்தில் வந்த வண்ணம் உள்ளது.
இவர் பொதுவாக சினிமாவையும் தாண்டி சமூக நலன் மீது பெரும் அக்கறை உடையவர். அந்தவகையில் இவரால் முடிந்த அளவிற்கு பல மாவட்டங்களுக்கு சென்று மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அனைவர் உள்ளத்தையும் கவர்ந்துள்ள இவர் முதலில் பிரபல இயக்குனரான பாலச்சந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
எனவே விவேக்குக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையாக இருந்ததுள்ளது. பிறகு இயக்குனர் பாலச்சந்திரன் அவர் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
இந்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகவும் சிறப்பாக காமெடியில் கலக்கியதால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அந்த வகையில் முதல் முதலில் விவேக் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில் விவேக் படம் இயக்குவதற்காக தரமான ஸ்கிரிப்ட் ஒன்றை தயாராக வைத்திருந்தார். அந்த படத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்தை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாராம் ஆனால் இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. அதோடு நடிகர் கமலஹாசனுடம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டாராம் இதுவும் நிறைவேறாமல் போய்விட்டது.