திரை உலகில் நாம் விவேக்கை காமெடி நடிகராகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரம் தான் பார்த்திருக்கிறோம் அதையும் தாண்டி நிஜத்தில் அவர் சமூக அக்கறையும் கொண்டவராக மட்டுமல்லாமல் அப்துல் கலாமின் நெருங்கிய நபராகவும் இருந்தவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பற்றி தான் நமக்கு தெரியும் விவேக் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக ஆக வேண்டும் என்ற கனவு ஆசையுடன் தான் வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா.
அப்போதையகாலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனராக பாலச்சந்தர் இருந்தார் அவருக்கு உதவி இயக்குனராக பணி புரிய ஆசைப்பட்டு அவரை அடிக்கடி பார்த்து சந்தித்தார் ஆனால் அவரின் சுறுசுறுப்பை பார்த்த இயக்குனர் அவரை தன் படங்களில் கமிட்டாகி நடிக்க வைத்து நடிகராக மாறிவிட்டார்.
நடிகர் விவேக் நடித்த முதல் திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் என்ற படம்தான். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் காமெடியில் அசத்தி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக மாறினார்.
ஆனால் இருப்பினும் சினிமாவுலகில் பயணிக்கும் போது எனக்கு பிடித்த நடிகரான விஜயகாந்தை வைத்து எப்படியாவது ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க வேண்டுமென ஆசைப்பட்டவர். ஆனால் அது நிறைவேறாமல் போனதாக இப்பொழுது அந்த தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும் விவேக்கு மிக பிடித்த நடிகராக பார்க்கப்படுபவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.