காமெடி நடிகர் விவேக் இன்று அதிகாலை திடீரென காலமான செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்துவருகிறது. இவர் நடிக்கும் திரைப்படங்களில் காமெடி கலந்த சமூக கருத்துக்களை கூறுவதால் இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
காமெடியுடன் சமூக கருத்துக்களையும் நகைச்சுவையோடு கொடுத்து வந்த ஒரு மாபெரும் கலைஞர் இழந்துவிட்டார் என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் கொதிக்கிறது. இந்த நிலையில் அவருடைய உடல் தற்போது விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விவேக் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். அதுமட்டுமில்லாமல் மாணவர்களை ஒன்று திரட்டி ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சமூக சேவை செய்தவரும் இவரே.
மேலும் விவேக் சமூகவலைதளத்தில் ஆன்மீக கருத்துக்கள் விவேகானந்தர் வள்ளலார் போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருபவர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இறப்பு குறித்து ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பதிவு தற்பொழுது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஒருநாள் முடிந்து தான் போகிறது எனினும் பலர் இறப்பார் சிலரை இறப்புக்குப் பின்னரும் இருப்பார் என பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்ததாவது இறப்புக்குப் பின்பும் மக்கள் மனதில் விவேக் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.