தற்பொழுது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள ஒன்று விவேக்கின் மறைவு. எதிர்பாராதவிதமாக இவர் இறந்ததால் யாராலும் இவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவருக்கு ஏற்கனவே இதயத்தில் அடைப்பு இருந்துள்ளது. இது தெரியாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிகவும் இவரை பாதித்துவிட்டது. பிறகு மருத்துவர்கள் வெகுநேரம் போராடியும் விவேக்கை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் விவேக்கின் பிரிவு தாங்க முடியாமல் திரையுலகினர்கள்,குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
பொதுவாக விவேக் நடிப்பையும் தாண்டி சமூக அக்கறையின் மீது மிகவும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் பல மாவட்டங்களுக்கு சென்று பல மரங்களை நட்டுள்ளார். அதோடு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளார்.இவ்வாறு சிரிப்பால் சிந்திக்க வைத்த விவேக்கை அப்துல் கலாமுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில் விவேக் பட சூட்டிங் மற்றும் வீட்டில் ஓய்வாக இருக்கும் பொழுது கிடைக்கும் நேரங்களில் தனது தனி ஸ்டைலில் மிகவும் அழகாக பல ஸ்டைலில் வீடியோக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் அந்த வீடியோக்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Hey style lovers!! Here is one for you! Enjoy! Eley! Don’t worry be happy!! 😀 pic.twitter.com/gdPhHAvZGX
— Vivekh actor (@Actor_Vivek) March 9, 2021
Dear kids n style lovers! Here is one for you…! An apple a day keeps the Dr away!! But a Nellikkai (gooseberry)a day keeps all diseases away!! ஏழைகளின் ஆப்பிள் நெல்லி தான்! pic.twitter.com/NuqOUS3sVT
— Vivekh actor (@Actor_Vivek) March 27, 2021
Global warming will deplete snow mountains n drinking water may become a rarity! எனவே ( நிலத்தடி)குடிநீரை பாதுகாப்போம்; நீர்நிலைகளை பராமரிப்போம்!! pic.twitter.com/pSv9JtOBvD
— Vivekh actor (@Actor_Vivek) April 10, 2021