தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக் அவரின் மறைவு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகர் பார்த்திபன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து காமெடி நடிகராக வலம் வந்தவர் இவர் திடீரென மாரடைப்பால் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்பொழுது வயது 59ஆகும்.
அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக வந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர் எக்மோர் சிகிச்சை அளித்து வந்தார்கள் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பாக கூறப்பட்டது.
இதனையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்டது. விவேக்கின் மறைவு குறித்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்தநிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தன்னுடைய இரங்கலை தனது பாணியில் கூறியுள்ளார் அவர் பதிவில் கூறியதாவது. சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நபர் விவேக் அவர்களின் பிரிவு வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்.!எனக் கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு … வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 17, 2021