காமெடியில் உச்சத்தைத் தொட்டு ஒட்டுமொத்த திரையுலகினர், ரசிகர்கள் என்று அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் காமெடியிலும் சமூகத்துக்கு உரிய நல்ல கருத்துகளை கூறி மாமனிதராக உயர்ந்தார். எனவே இவரை சிரிப்பில் சிந்திக்க வைக்கும் மாமனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.
இந்நிலையில் நேற்று திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தவகையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:55 மணி அளவில் காலமானார்.
இத்தகவல் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் திரையுலகினர், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது இறக்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது விவேக் தனது 59 ஆவது அகவையில் காலமாகி உள்ளார். தற்பொழுது விவேக்கின் உடல் சென்னையிலுள்ள விருகம்பாக்கம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவேக் சினிமாவையும் தாண்டி அதிக சமூக அக்கறை கொண்டவர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று பல மரக்கன்றுகளை நட்டுள்ளார். அந்தவகையில் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் என்று பலரையும் மரக்கன்று நடுவதற்காக ஊக்குவிப்பார் .
இந்நிலையில் தாராள பிரபு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக்கிடம் ரசிகர் ஒருவர் பெரிய பிரபலம் ஒருவருக்கு சவால்விட வேண்டும் ஆனால் யாருக்கு விடுவீர்கள் என்று கேட்டுள்ளார்.அதற்க்கு விவேக் நான் கண்டிப்பாக தல அஜித்திற்கு தான் சவால் விடுவேன் என்று கூறினார்.
அதாவது தல அஜித் பெருத்த ரசிகர் பட்டாளத்தை உடையவர் எனவே தனது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரு மரக்கன்று நட சொல்லவேண்டும். இந்த வகையில் வாயால் கூறவில்லை என்றாலும் அறிக்கை போல் கூறினால் கூட போதும். அஜித் சொன்னால் அவருடைய ரசிகர்கள் என்ன வேணாலும் செய்வார்கள் ஒரு மரக்கன்று நட மாட்டார்களா என்று கூறி உள்ளார்.