இதையும் மீறி செய்தால் இதுதான் நடக்கும்.! அஜித் விஜய் ரசிகர்களை நேரடியாக எச்சரித்த விவேக்.!

ajith-vijay-vivek
ajith-vijay-vivek

vivek open talk about ajith vijay fans : தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக், இவர் தன்னுடைய நகைச்சுவையில் சீரியஸ் இருக்க வேண்டும் என்பதற்காக சில சமூக கருத்துகளையும் சேர்த்து நகைச்சுவையாக கூறுவார் விவேக்.

இவரை தமிழ் ரசிகர்கள் சின்ன கலைவாணர் என கொண்டாடி வருகிறார்கள், அதேபோல் நடிகர் விவேக் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உள்ளார், அதேபோல் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் நடிகர் விவேக் ஆக்டிவாக எப்பொழுதும் தன்னுடைய கருத்தை பதிவிட்டு வருவார், கோர் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள் இந்த சமயத்தில் டுவிட்டரில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் விஷயம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

இதுவரை தல தளபதி ரசிகர்கள் நெட்டிசன்களை மட்டுமே கடுப்பாகி வந்தார்கள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் தற்பொழுது தல தளபதி ரசிகர்கள் இருவரும் தேவையில்லாத பார்த்த வேளையில் நடிகர் விவேக் செம கடுப்பில் இருக்கிறார். சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடிக்காத நடிகர் நடிகை மற்றும் அரசியல் பிரமுகர்கள் குறித்து அதிகமாக தரக்குறைவாக பேசி வருவது அதிகரித்துள்ளது.

அப்படி அஜித்-விஜய் குறித்த கொச்சையான பதிவிற்கு நடிகர் விவேக்கை டேக் செய்து தொல்லை கொடுத்துவந்த நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விவேக், இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். Stay home stay safe! என கூறியுள்ளார்.