தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் காமெடியில் கருத்து சொல்லி ரசிகர்களை மகிழ்விக்க வைத்தவர் நடிகர் விவேக் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலர். இவர் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
ரஜினி கமல் உள்ளிட்ட பல திரை முதலைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்திரன் தான் நடிகர் விவேக் அவர்களை அறிமுகப்படுத்தப்பட்டார் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், அஜித், விஜய், சரத்குமார், விஜயகாந்த் என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் தன்னுடைய காமெடியில் காமெடி மட்டுமில்லாமல் சமூக கருத்துகளையும் கூறி வந்தவர்.
அப்துல் கலாம் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஒரு கோடி மரம் நடுவதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டார் அதற்கான வேலைகளில் படும் முன்புறமாக இருந்து வந்தார் இந்த நிலையில் நடிகர் விவேக் 2021 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் இவரின் இழப்பு பல ரசிகர்களின் கவலையாக இருந்தது.
இப்படி ஒரு உன்னதமான மனிதர் இறந்துவிட்டார் என பலரும் பரிதவித்தார்கள் இந்த நிலையில் தற்போது விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வனிக்கு அவருடைய தந்தை விவேக் வாழ்ந்த வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றது தேஜஸ்வினி சிரஞ்சீவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
விவேக் மகளின் திருமணத்தின்போது மரக்கன்றுகளை நட்டு விவேக்கின் ஆசிர்வாதம் கிடைப்பது போல் நடந்து கொண்டார் அவரின் மகள் மேலும் மரக்கன்று மூலிகைச் செடிகள் போன்றவை இவர்களின் திருமணத்தில் வழங்கப்பட்டது.