ஒட்டு மொத்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று நடிகர் விவேக்கின் இறப்பு. இவர் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே அவர் மிகவும் சீரியஸாக இருக்கிறார் என்று அனைத்து ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அனைவரும் நீங்கள் மீண்டும் குணமடைந்து நலமாக வந்து விடவேண்டும் என்று பலர் கூறிவந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்தநாளே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் இவரின் இறுதி சடங்கில் பல பிரபலங்கள் இணைந்து கொண்டார்கள் அதோடு பல சோகமான டுவிட்டுக்களையும் வெளியிட்டு வந்தார்கள். அந்தவகையில் விவேக்கின் கனவாக இருந்த ஒரு கோடி மரக்கன்று நட வேண்டும் என்பது. ஆனால் கிட்டத்தட்ட விவேக் 30 லட்சத்தையும் தாண்டி மரக்கன்றுகளை வைத்துவிட்டார்.
எனவே மீதமுள்ளதை ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் விவேக்கின் ஆசையை நிறைவேற்றும் என்பதற்காக பல மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். இவ்வாறு சினிமாவிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்துவிட்டு அதே அளவிற்கு சமூகத்தின் மீதும் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளார்.
எப்படிப்பட்ட ஒருவருக்கே இந்த நிலைமை. இந்நிலையில் பல பிரபலங்கள் விவேக்குடன் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உட்பட பலவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அவ்வகையில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்யுடன் இணைந்து விவேக் 12 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடைசியாக பிகில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தளபதி விஜயுடன் விவேக் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.