நடிகை வித்யா பிரதீப் தமிழில் அருண் விஜய்யுடன் இணைந்து தடம் என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்திருந்தார். மேலும் இவர் இதற்கு முன் சைவம் திரைப்படத்தில் பேபி சாராவுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் நாயகி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியலில் லிவிங் ரோலில் நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்தார்.
மேலும் இவர் நடிகை மட்டுமல்லாமல் மருத்துவ படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படிக்கும் போதே மாடலிங்கில் ஆர்வம் காட்டியுள்ளார். மேலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார் .
அந்த வகையில் இவர் தற்போது மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு மிக அழகாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தப்ற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.