நல்ல படிப்பை படித்துவிட்டு அதற்கான வேலைகளும் கிடைத்து இருக்கும் இருந்தாலும் அதனை பெரிதாக விரும்பாமல் சினிமா துறையின் மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தனது படிப்பிற்கான கிடைத்த வேலையை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் நடித்து வரும் பலரும் உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர்தான் வித்யா பிரதீப். இவர் ஒரு கண் மருத்துவர் ஆவார். அந்தவகையில் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு மாடலின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த சைவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து பசங்க 2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி என பல திரைப்படங்களில் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்து இருந்த எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்தும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது லாக்டோன் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வித்யா பிரதீப் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மார்லின் மன்றோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.