முக்கிய பிரபலத்தையே ஆச்சரியப்பட வைத்த விசுவாசம் திரைப்படம்.! மாஸ் காட்டிய தல ரசிகர்கள்.

thala ajith
thala ajith

சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித் இவர் சமீபகாலமாக மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடத்த விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்ப்பு கிடைத்தது. இப்படம் இல்லமால் சிவா  அஜித்துடன் மூன்று படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தை குடும்பங்கள் ரசிக்கும் படி தனது சிறந்த படைப்பை படைத்திருந்தார். இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய பாடலை எழுதியவர்களில் அருள் பாரதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

thala ajith
thala ajith

விசுவாசம் படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டது இதனையடுத்து அருள் பாரதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.விசுவாசம் சென்ற ஆண்டு வெளியானதா இல்லை இந்த ஆண்டுதான் வெளியானததா என குழப்பம் வந்துவிட்டது ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும் தொலைபேசியில் அழைத்து பாராட்டுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது என கூறி நன்றி தெரிவித்தார்.

இந்த பதிவை பார்த்த தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர் அதுமட்டுமில்லாமல் அருள் பாரதி அவர்கள் வெளியிட்ட பதிவிற்கு தல ரசிகர்கள் சில பதில்களை கூறியுள்ளனர். அதனை நீங்களே பாருங்கள்.