விஸ்வரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பூஜாகுமார். இப்படத்தின் மூலம் தனக்கென மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இப்படத்தில் அவர் சற்று கவர்ச்சியாக நடித்திருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலமாக உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் படங்களில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தவர்.
இவர் கமலுடன் விஸ்வரூபம் 1, ஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பூஜா குமார் அவர்கள் 1999 ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இதனைத்தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்திருந்த நிலையில் திடீரென தமிழ் திரை உலகிற்கு கமல்ஹாசன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கமலுடன் இவர் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தார்,கமலின் வீட்டு விசேஷங்கள் மற்றும் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் கமல் இருக்கிறாரோ இல்லையோ பூஜா குமார் அவர்கள் கண்டிப்பாக இருப்பார் என ஊடகங்களில் மற்றும் டிசைன்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
சமீபகாலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது இவருக்கு 43 வயது ஆனாலும் தனது கவர்ச்சியை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அவரது ரசிகர்கள் நீங்கள் இந்த வயசிலேயும் அழகாகவே இருக்கிறார் எனவும் கூறிவருகிறார்கள்.