எப்ஐஆர் படத்தை பல கோடி கொடுத்து கைப்பற்றிய முன்னணி நிறுவனம் – கோடிகளில் புரளும் நடிகர் விஷ்ணு விஷால்.

vishnu vishal
vishnu vishal

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமா ஆரம்பத்தில் கிராமத்தை கதைகளையே பெரிதும் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதலில் இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பின் குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன் என சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படத்திற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நன்றாகவே இருக்கிறது.

இப்பொழுது கூட இவர் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறாராம் 2022ல் இவரது கையில் FIR, மோகன்தாஸ் ஆகிய படங்கள் இருக்கின்றன முதலாவதாக எப்ஐஆர் திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த படத்தை போட்டி போட்டுக்கொண்டு OTT தளங்கள் பல கோடி ஆசை காட்டி  வாங்க முனைப்பு காட்டின.

ஆனால் விஷால் இந்த திரைப்படத்தை கொடுக்க மறுத்துவிட்டார். FIR திரைப்படம் வருகின்ற பதினோராம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தையும் மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா போன்ற பலரும் நடித்துள்ளனர் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடி லாபம் பார்த்து உள்ளது இந்த படம் ரிலீசுக்கு முன்பே பிரபல OTT நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு வாங்கியுள்ளது அந்த நிறுவனம் வேறு எதுவும் இல்லை அமேசான் தான் இந்த நிறுவனம் 7 கோடிக்கு  இத்திரைப்படத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.