தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் பலரும் சிக்ஸ்பேக் வைத்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் பல முன்னணி நடிகர்கள் சினிமாவில் சிக்ஸ்பேக் வைத்து நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
முன்னணி நடிகர்களான சிம்பு தனுஷ், விஷால், பரத், ஆர்யா என பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து ஒரு சில திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் கண்ணாடி முன்பு தனது சிக்ஸ்பேக் தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் கண்டிப்பாக தனது அடுத்த திரைப்படத்தில் நடித்ததற்காக தான் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஷ்ணு விஷாலுக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், காடன் ஜெகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர். ஆரண்யா, மோகன்தாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மூன்று திரைப்படங்கள் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது.