இதனால்தான் டிவோர்ஸ் ஆயிடுச்சா விஷ்ணு விஷால் காதலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! இது தேவையா

vishnu vishal
vishnu vishal

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இது குறித்து விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார், இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிகை அமலாபாலை காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவியது, ஆனால் அதை முற்றிலுமாக மறுத்தார் விஷ்ணுவிஷால்.

இந்த நிலையில் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஒருவரை ஒருவர் தற்காத்துக்கொள்ள சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்தநிலையில் ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலை பிரிந்து இருப்பதை சோகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ‘miss you boo’ எனக் கூறியுள்ளார்

அதற்கு பதிலளித்துள்ள விஷ்ணுவிஷால் பரவாயில்லை. இப்பொழுது இந்த சமூக விலகல் மிக முக்கியம் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய் என பொறுப்புடன் கூறியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்காக தான் பொண்டாட்டியை விவாகரத்து செய்தாயா என கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.