நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய காதலி தம்முடைய தோழிகளுடன் ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டியில் கொண்டாட்டமாக இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மனைவியை ஜீவாலா காட்டாவுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். தனது மனைவியை விவாகரத்து செய்த கையோடு புதிய காதலியையும் தேடிக்கொண்டார்.
அதாவது ஜீவாலா காட்டவும் நடிகர் விஷ்ணு விஷால் அவர்களும் அடிக்கடி நைட் பார்ட்டியில் பங்கேற்றது, வெளியில் ஒன்றாக சுற்றுவது நெருக்கமான புகைப்படம் எடுத்துக் கொள்வது என பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள் அதற்கு இருவரும் வாயை திறக்காமல் மவுனம் காத்து வந்தார்கள்.
ஒரு காலகட்டத்தில் அதிகமாக கேள்வி எழுப்பியதால் ஜீவாலா காட்டாவுடன் காதல் உறவில் இருப்பது உண்மைதான் என நடிகர் விஷ்ணு விஷால் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டேட்டிங் சென்ற பொழுது நள்ளிரவில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு வீட்டிலேயே தங்களுடைய நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அந்த இரு காதலர்களுக்கும் வாழ்த்துக் கூறி வந்தார்கள் பலரும் இந்த நிலையில் மாலத்தீவுக்கு இருவரும் தங்களின் ஓய்வை கழிக்க சென்றுள்ளார்கள் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கார்டன் படத்தில் தெலுங்கு வர்ஷன் ஆன ஆரண்யா படத்தின் பிரிவியூ நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணுவிஷால்.
விரைவில் ஜீவாலா காட்டாவை திருமணம் செய்துகொண்டு தெலுங்கு மருமகனாக போவதாக கூறியுள்ளார்.